முன்னுரை
எங்களிடம் ஒரு அழகான உலகம் உள்ளது.இருப்பினும், மக்களின் சுயநலம், பேராசை, வெறுப்பு, பொறாமை மற்றும் ஏமாற்றுதல் என்பவற்றால் இந்த உலகம் அழகை இழந்து கொண்டு போகின்றது.இவ்வாறான செயலைச் செய்து உலகத்தை அழிக்கிறார்கள். உலகின் ஒரு பகுதி எமது உறவுகள் சரியான கல்வி, வாழ்வாதாரம் இல்லாமல் வாழ்கின்றார்கள். எங்களால் என்ன செய்யலாம்?
நாம் எமது சொந்த வேலையைப் பார்த்து எமது சகோதரர்களை புறக்கணிக்க முடியுமா?
இல்லை, நாம் ஒவ்வொருவரும் சிறிய பங்களிப்பைச் செய்ய வேண்டும், அது எமது கடமையாகும்.
அவ்வாறு செய்வதால் எமது உறவுகளின் வாழ்வில் சிறப்பான மாறுதல் ஏற்படும் .
நமது ஒத்துழைப்பின் மூலம் இந்த உலகத்தில் சிறிய மாற்றத்தை ஏற்படுத்த முடியும்,
அவ்வாறு மாற்றும் பொழுது நாம் கடவுளின் அன்புக்கு உரியவர்களாக மாறுகின்றோம்.
நமது சிறிய நன்கொடைகள் மூலம், நமது அர்ப்பணிப்பின் மூலம், ஒரு நேர்மையான மற்றும் தூய்மையான அழகான உலகத்தை உருவாக்க முடியும், அது எமது கடமையும்ஆகும்.
மக்கள் தொகையில் பெரும் பகுதியினர் பசி மற்றும் தாகத்தால் பாதிக்கப்படுகின்றனர். மற்றும் தொழில்முறை வாய்ப்புகள் இல்லாமை மற்றும் நிதிப்பாதுகாப்பு இல்லாமை காரணமாகும். எமது உறவுகளின் வாழ்க்கை நிலைமைகளை மேம்படுத்த வேண்டும் என்ற தொலைநோக்கு பார்வையால் நாங்கள் ஒன்றுபடுவோம்.
IMC தலைமை
நிர்வாக அதிகாரி...



